நெல் விதை, தென்னங்கன்றுகள் விற்பனைக்கு
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விதை அறிவியல் மற்றும் நுட்பவியல் துறை சார்பில் நெல் விதைகள், தென்னங்கன்றுகள் விற்கப்படுகின்றன.கார், குறுவை, சொர்ணவாரி, கோடைக்கு ஏற்ற ஆடுதுறை 57 ஆதார நிலை 2 ரகத்தில் 1980 கிலோ விதைகள் இருப்பு உள்ளது. இதன் வயது 115 நாட்கள். எக்டேருக்கு 6500 கிலோ மகசூல் கிடைக்கும் சன்னரகம். பின்சம்பா, தாளடிக்கு ஏற்ற ஆடுதுறை 54 ஆதார நிலை 2 ரகத்தில் 1830 கிலோ விதை இருப்பு உள்ளது.130 முதல்135 நாட்கள் வயது, எக்டேருக்கு 6300 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ நெல் விலை ரூ.44. பாசுமதியை போன்று நீளமாகவும் வாசனையும் கொண்ட கோ 58 உண்மை நிலை விதை 210 கிலோ விதை உள்ளது. 120 முதல்135 நாட்கள் வயது, எக்டேருக்கு 5800 கிலோ தரவல்லது. கிலோ விலை ரூ.36.ஐந்தாண்டில் காய்க்கக்கூடிய தென்னை (இ.சி.டி.)நெட்டை ரகம் கன்றுகள் தலா ரூ.75க்கு கிடைக்கும்.அலைபேசி: 70105 83044.