உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வலி தணிப்பு சிகிச்சை மையம்

வலி தணிப்பு சிகிச்சை மையம்

திருநகர் : விளாச்சேரி ஐஸ்வர்யம் நேத்ராவதி வலி, நோய் தடுப்பு மறுவாழ்வு மையத்தில் கேன்சர் நோயாளிகளுக்கான வலி தணிப்பு சிகிச்சை மையம் திறப்பு விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் பாலகுருசாமி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கவுரி திறந்து வைத்தார். ரோட்டரி மாவட்ட ஆளுனர் ராஜ கோவிந்தசாமி, வழக்கறிஞர்கள் சாமித்துரை, மாணிக்கம், ஸ்ரீனிவாச ராகவன், சக்தி நிறுவனம் மேலாண்மை இயக்குனர் சியாம் பிரகாஷ் குப்தா பேசினர். கவுன்சிலர் இந்திராகாந்தி, ஜெயின்ட்ஸ் குரூப் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராமலிங்கம், நடராஜன் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை