உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொட்டாம்பட்டியில் பங்குனி திருவிழா

கொட்டாம்பட்டியில் பங்குனி திருவிழா

கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டி துவராள்பதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று தும்பைபட்டியிலிருந்து அம்மன் சிலையை பக்தர்கள் சுமந்து 6 கி.மீ.,தொலைவில் உள்ள கச்சிராயன்பட்டி கோயிலுக்கு கொண்டு சென்றனர். பிறகு மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.இன்று (ஏப். 8) கச்சிராயன்பட்டியில் இருந்து சுவாமி சிலை மணப்பட்டி துவராள்பதி கோயிலுக்கு கொண்டு செல்வர். நாளை அம்மன் கோயிலில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், குழந்தை வரம் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் குழந்தையை கரும்பினால் தொட்டியில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

முத்துபிடாரி அம்மன்

தனிச்சியம் முத்துப்பிடாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் நேற்று கோயில் முன்பு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். பிறகு மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ