மேலும் செய்திகள்
வாழவந்தாள் அம்மன் பங்குனி பொங்கல் விழா
09-Apr-2025
மேலுார் : சொக்கம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம்
கொட்டாம்பட்டி: வஞ்சி நகரம் கருப்ப சுவாமி வஞ்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறுமிகள் வீடு வீடாக சென்று முளைப்பாரிக்கான விதைகளை சேகரித்து கோயில் நிர்வாகிகள் வீட்டில் வைத்து வளர்த்தனர். நேற்று வீட்டில் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். இன்று (ஏப். 9) கோயிலில் இருந்து முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு சென்று கருப்ப சுவாமி கோயில் அருகே உள்ள அம்மன் கிணற்றில் கரைக்கின்றனர். இன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
09-Apr-2025