உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூர் வட்டார பெற்றோர் கலக்கம் மாணவியரை தொடரும் ரோமியோக்களால்

பேரையூர் வட்டார பெற்றோர் கலக்கம் மாணவியரை தொடரும் ரோமியோக்களால்

பேரையூர் : பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, அத்திபட்டி பகுதிகளில் பள்ளி மாணவிகளை பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.பள்ளி நேரம் துவங்கும் அல்லது முடியும் நேரங்களில் மாணவிகள் சாலையில் நடந்து வரும்போது டூவீலர்களில் உலா வரும் ரோமியோக்கள் தொந்தரவு கொடுக்கின்றனர். சில மாணவியர் தங்கள் வீட்டில் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். பலர் பயத்தில் மறைத்து விடுகின்றனர்.தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவிகள் படிப்பு கவனத்துடன் சென்று வருகின்றனர். தேர்வு மதியம் முடிந்து விடுவதால் மாணவிகள் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், சாலை வழியாக சொல்லும் போது, இந்த 'ரோட்டோர' ரோமியோக்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்ப எதையாவது செய்கின்றனர். இதனால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். பள்ளி நேரங்களில் போலீசார் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ