உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை தெற்கு தொகுதி வீக் கூடுதல் கவனம் செலுத்துங்க... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மதுரை தெற்கு தொகுதி வீக் கூடுதல் கவனம் செலுத்துங்க... முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மதுரை : 'மதுரை தெற்கு தொகுதி சட்டசபை தொகுதி 'வீக்' ஆக இருக்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்' என நிர்வாகிகளிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தொகுதிவாரியாக பகுதிச் செயலாளர்களை சென்னையில் சந்தித்து வருகிறார். நேற்று அவரை மதுரை தெற்குத் தொகுதி பகுதி செயலாளர்கள் ஜீவன்ரமேஷ், முகேஷ் சர்மா, அன்வர், போஸ்முத்தையா, முத்து ஆகியோர் சந்தித்தனர். உடன் தென் மண்டல பொறுப்பாளர் தங்கம் தென்னரசு, நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., இருந்தனர். ஸ்டாலின் கூறுகையில், தெற்கு தொகுதி கொஞ்சம் 'வீக்' ஆக உள்ளது என ரிப்போர்ட் வந்துள்ளது. மாவட்ட செயலாளர் உங்கள் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்தாமல் தெற்கிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு திட்டங்களை தொகுதி மக்களிடம் கொண்டு சென்றுசேருங்கள் என்றார். இதையடுத்து பகுதி செயலாளர்களிடம் அந்தந்த பகுதிக்கு வட்ட செயலாளர், கவுன்சிலர்கள் மீது தலைமைக்கு வந்த புகார்கள் குறித்த 'பைல்'களை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதில், வட்ட செயலாளர் ஒருவர் மீது செயின் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி