ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்..
மதுரை: மதுரையில் மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பு, தமிழ்நாடு ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரமைப்பு தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். மாநில பொருளாளர் எஸ்.சம்பத் துவக்கி வைத்து பேசினார். தென்மண்டல அஞ்சல் ஓய்வூதியர் அமைப்பின் அம்மையப்பன், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் அமைப்பின் நிர்வாகி ராஜேந்திரன், ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் அமைப்பு பார்த்தசாரதி, பேராசிரியர் மனோகரன் பேசினர். மண்டல பொருளாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஓய்வூதிய மதிப்புறு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவை நியமிக்க வேண்டும். மாநில அரசு, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 1.4.2003 க்கு பின் நியமனம் பெற்றோருக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.