உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மக்கள்

தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மக்கள்

மேலுார் : கீழவளவில் மேல் நிலைத்தொட்டி கட்டி முடித்து 8 மாதங்களாகியும், ஆழ்துளை கிணறு அமைக்காததால் மக்கள் தண்ணீரை தேடி வெகுதுாரம் அலைந்து திரியும் அவலம் நிலவுகிறது. கீழவளவு ஊராட்சி 2 வது வார்டில் 900 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வார்டில் ஒரு தெருக் குழாய் மட்டுமே உள்ளது. இதனால் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. தண்ணீர் பற்றாக்குறை குறித்து அதிகாரிகளிடம் வலியுறுத்தியதால், ரூ. 8 லட்சம் செலவில் 8 மாதங்களுக்கு முன் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. அப்போதே பணிகள் முடிந்தும் இதுவரை தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக உள்ளது. அப்பகுதியின் முத்துமாணிக்கம் கூறியதாவது: தொட்டி கட்டுவதற்காக நீண்ட நாள் போராடினோம். அமைத்தபின் 8 மாதங்களாக போர்வெல் அமைக்க போராடுகிறோம். ஊராட்சி செயலரிடம் கேட்டால் போர்வெல் அமைக்க இடம் தேர்வு செய்வதாக கூறுகிறார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாநில நெடுஞ்சாலையை கடந்து உயிரை பணயம் வைத்து தண்ணீர் பிடித்து வருகிறோம். ஜல் ஜீவன் திட்டத்திலும் குழாய் பதித்ததோடு சரி, தண்ணீர் வரவில்லை. மாவட்ட நிர்வாகம் போர்வெல் அமைத்து, குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்றார். ஊராட்சி செயலர் பாலமுருகன் கூறுகையில், ''ஒரு வாரத்திற்குள் போர்வெல் அமைத்து குழாய் பதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி