உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொசுக்கடியால் புலம்பும் மக்கள் சுகாதார சீர்கேட்டில் பேரையூர்

கொசுக்கடியால் புலம்பும் மக்கள் சுகாதார சீர்கேட்டில் பேரையூர்

பேரையூர்: பேரையூரில் சாக்கடை கால்வாயை துார்வாரி சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் அதிகரித்து கடிதாங்க முடியாமல் பொதுமக்கள் புலம்புகின்றனர்.பேரையூர்-சிலைமலைப்பட்டி சாலையில் சாக்கடையை சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.இந்த சாலையில் துர்கா நகர், பரத பாண்டியன் நகர், கலைஞர் நகர், பராசக்தி நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் பேரூராட்சியினர் மெத்தனமாக உள்ளதால் பிளாஸ்டிக் காகிதங்கள், கழிவுகள் அடைத்துள்ளன. கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது மழைநீர் செல்ல வழியின்றி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது.இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கொசுக்கடியால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. அடிக்கடி காய்ச்சல் வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !