காத்துக் கிடக்கும் மக்களுக்கு குழாயில் கிடைக்கிறது காற்று கொட்டாம்பட்டி குடிநீர் அவலம்
கொட்டாம்பட்டி: 'கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் இரண்டு கிராமங்களில் மோட்டாரை பழுது நீக்குவதாக கூறி எடுத்துச்சென்று 15 நாட்களுக்குப் பிறகும் சரி செய்யாததால் குடிநீருக்கு மக்கள் தவிக்கின்றனர்.கச்சிராயன்பட்டி ஊராட்சி பரமநாதபுரம், மாங்குளப்பட்டி கிராமங்களில் 1300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு போர்வெல், காவிரி கூட்டுக் குடிநீர் தண்ணீர் என 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள 2 தொட்டிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. 15 நாட்களுக்கு முன் மோட்டார் பழுதானது. உடனே மோட்டாரை பழுது நீக்குவதாக கூறி ஊராட்சி நிர்வாகம் கழற்றி சென்றது. இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.ஜெயலட்சுமி: குடிநீர் பற்றாக்குறையால் வெகுதொலைவு சென்று விவசாய மோட்டாரில் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்துகிறோம். வறட்சி நிலவுவதால் அவர்களும் தண்ணீர் தர மறுக்கின்றனர். ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், உடனே சரிசெய்வதாகக் கூறி அலைக்கழிக்கின்றனர். கலெக்டர் தலையிட்டு குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர்.