உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கழிவுநீரால் துாக்கம் தொலைத்த மக்கள்

கழிவுநீரால் துாக்கம் தொலைத்த மக்கள்

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி சிவன்காளைத்தேவர் தெருவின் விரிவாக்க பகுதி காளியம்மன் கோயில் தெருவில் தேங்கும் கழிவு நீரை அகற்ற வழிதெரியாமல் ஆறு மாதமாக போராடி வருகின்றனர்.இத்தெரு மதுரை ரோடு வரையில் முழுமையடையாமல் உள்ளது. இதனால் தனிநபர் பட்டா இடத்தில் தற்காலிகமாக 50 அடி துாரம் தரையில் குழாய் பதித்து கழிவுநீர் கடத்தப்பட்டது. இதில் செல்லும் சாக்கடையால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றுகூறி அப்பகுதியினர் கழிவு நீரை மாற்று வழியில் கொண்டு செல்ல நகராட்சியில் தெரிவித்தனர். அத்துடன் கழிவு நீர் சென்ற பாதையை அடைத்து விட்டனர்.இதனால் நுாற்றுக்கணக்கான வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வெளியேற வழியின்றி தெருவிலேயே தேங்கி நிற்கிறது. கழிவுநீரால் துர்நாற்றமும், கொசுக்களின் உற்பத்தியும், மழை நீரும் சேர்ந்து அந்தப்பகுதி மக்களை துாங்கவிடாமல் செய்கிறது.முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை