உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தீபத்துாணில் தீபம் ஏற்ற மக்கள் மனு

 தீபத்துாணில் தீபம் ஏற்ற மக்கள் மனு

திருப்பரங்குன்றம்: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வேடர் புளியங்குளம் கிராம ஐந்து முதன்மைகாரர்கள் சார்பில் பெரிய நாட்டாமை நல்லுச்சாமி அளித்துள்ள மனு: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட தீபத்துாணில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மகா தீபத்தன்று தீபம் ஏற்றி வழிபட்டபின் சுற்று வட்டார கிராமங்களில் தீபம் ஏற்றப்படும் என எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர். இடைப்பட்ட காலத்தில் ஆட்சி மாற்றம், படையெடுப்புகளால் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றாமல் மோட்சதீபம் ஏற்றும் இடத்தில் கோயில் நிர்வாகம் ஏற்றிவருகிறது. தற்போது நீதிமன்ற உத்தரவின்படி மலைமேல் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற கிராமமக்கள் சார்பில் வேண்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை மாநில தலைவர் கண்ணனும் வலியுறுத்தி மனு அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ