நெடுஞ்சாலை ரோடு புதுப்பிக்க அனுமதி
மதுரை; மதுரை மாவட்டம் முழுவதும் மத்திய, மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. மாநில நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை மாவட்ட சாலைகள், இதர மாவட்ட சாலைகள், மாநில சாலைகள் என பல வகைகளாக செயல்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் இத்தகைய ரோடுகளை பராமரிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ள ரோடுகள் குறித்து விவரம் சேகரித்தனர். இதில் 97 கி.மீ.,க்கு ரோடுகளை பராமரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த ரோடுகள் பராமரிக்கப்பட உள்ளன. கோட்ட கண்காணிப்பாளர் மோகன காந்தி கூறுகையில், 'சாலைகள் பராமரிப்புக்கான நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் மதிப்பீடு தயாரித்து, டெண்டர் விடப்பட்டு பின் பணிகள் துவங்கும்'' என்றார்.