உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க மனு

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க மனு

மதுரை: மதுரை கலெக்டர் பிரவீன்குமாரை, உசிலம்பட்டி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பன் சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: 2024ல் வைகை அணையில் முழுக் கொள்ளளவு தண்ணீர் இருந்தும் 2 மாதங்களில் 2 முறை 71 அடியில் முழுக் கொள்ளளவுடன் தண்ணீர் இருந்தும் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கவில்லை. விவசாய சங்கங்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் திறக்கவில்லை. தற்போது முல்லைப் பெரியாறு, வைகை அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி போதுமான தண்ணீர் உள்ளது. குடிநீர் பிரச்னை தீர்க்கவும், ஆடு, மாடு வளர்ப்பதற்கும் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !