உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

நகை பறிப்புபேரையூர்: பெரியபூலாம்பட்டி சின்னன் மகள் நதியா 20. தந்தையும், மகளும் நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் எஸ். பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். பின்னர் பெரியபூலாம்பட்டி விலக்கு அருகே வந்தபோது, டூவீலரில் வந்த இருவர் நதியாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்து தப்பினர். நிலைத் தடுமாறிய சின்னன், நதியா இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடனால் தற்கொலைடி.கல்லுப்பட்டி: ராம்நகர் பால்கமணன் மகன் சந்தோஷ்குமார் 30. திருமணமானவர். சி.சி.டி.வி., இணைப்பு வழங்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கி திரும்பி செலுத்தாமல் மன உளைச்சலில் இருந்தார். நேற்று அதிகாலை டூவீலரை எடுத்துக் கொண்டு வெளியில் செல்வதாக கூறினார். இதே பகுதி பள்ளியின் உள்ளே துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவர் பலிதிருமங்கலம்: சுங்குராம்பட்டி சுபாஷ் 19. தனியார் கல்லுாரியின் 3ம் ஆண்டு மாணவர். நேற்றுமுன்தினம் இரவு திருமங்கலத்தில் இருந்து சுங்குராம்பட்டிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றார். ஊர் அருகே வேகத்தடையில் தவறி விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி