மேலும் செய்திகள்
கழிவுநீர் தேங்குவதால் மக்கள் மறியல்
18-Nov-2024
'ஷாக்' அடித்து தொழிலாளி பலி உசிலம்பட்டி: உசிலம்பட்டி ராமத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர் 75. கட்டடத் தொழிலாளியான இவர், நேற்று உசிலம்பட்டி பழைய பஸ்ஸ்டாண்ட் முன்பாக உள்ள மதுரை பஸ்கள் நிறுத்தத்தின் பின்பகுதி கண்மாய் கரையில் இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியை பிடித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.தேடப்படும் குற்றவாளிகள்மதுரை: மகாராஷ்டிரா மாநிலம் மானாராம் லட்சுமி பாய், குஜராத் அகமதாபாத் ஷியாம்குமார், வினோத்குமார், மங்கள்குமார். இவர்கள் நகை பாலீஷ் செய்து தருவதாக கூறி மோசடி செய்ததாக சுப்பிரமணியபுரம் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருக்கும் இவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.* மதுரை பெத்தானியாபுரம் ராம்குமார். 2019ல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர். நீதிமன்றம் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வரும் இவரும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஒருவர் சரண் மேலுார்: தும்பைபட்டி சீமான் 23, சிங்கப்பூரில் பட்டய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொந்த ஊர் திரும்பினார். டிச. 3 கோட்டைப்பட்டி விலக்கில் நண்பர்களுடன் மது அருந்திய போது காரில் வந்த 7 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இவ்வழக்கில் நேற்று மேலுார் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சொக்கம்பட்டி தனுஷ் 20, சரணடைந்தார்.
18-Nov-2024