உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்: மதுரை

போலீஸ் செய்திகள்: மதுரை

நால்வர் காயம்மேலுார்: திருப்பத்துார் அருகே பொன்னான்குடியைச் சேர்ந்தவர் அருண்குமார் 30, இவருடைய மனைவி கிருத்திகா 27. நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் மனைவியுடன் சொந்த ஊருக்குச் சென்றார். எதிரே டூ வீலரில் மந்திபிச்சன்பட்டி வீரணன் 55, மனைவி தங்கத்துடன் 50, வந்தார். இரண்டு வாகனங்களையும் ஓட்டியவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. நா. கோவில்பட்டி அருகே அருண்குமார் ஓட்டிச் சென்ற டூ வீலர் மீது, வீரணன் மோதினார். காயம்பட்ட நால்வரும் மேலுார், மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொலை மிரட்டல்: நால்வர் மீது வழக்குகொட்டாம்பட்டி : பொட்டப்பட்டி செல்வம் 65, இவருக்கும் பக்கத்து நிலத்தைச் சேர்ந்த சேதுராமன் குடும்பத்தினருக்கும் பாதை தொடர்பான பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் சேதுராமன் குடும்பத்தினர், பாதையை மறித்து முள்வேலி போட்டனர். செல்வம் தட்டிக் கேட்டார். சேதுராமன், உறவினர்கள் சூரியகலா, மதிவானன், கவிதா ஆகிய நால்வரும், கடப்பாறை மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். செல்வம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., மணிமாறன் விசாரிக்கிறார்.இருவர் காயம்மேலுார்: மல்லாகோட்டையைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் 20, நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் மேலுார் - மல்லாகோட்டைக்கு சென்றார். எதிரே வடக்குநாவினிபட்டி மகாராஜா 62, வந்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. நாவினிபட்டி அருகே சிவசுப்பிரமணியன் டூ விலர் மீது மகாராஜா ஓட்டிவந்த டூ வீலர் மோதியது. இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஸ்.ஐ., சுப்புலெட்சுமி விசாரிக்கிறார்.இருவர் கைதுமேலுார்: மேலவளவு எஸ்.ஐ., பிரகாஷ் பட்டூர் பெரிய அழகாபுரி கண்மாய் பகுதியில் ரோந்து சென்றார். அங்கு கரம்பை மண் அள்ளிய மூவர் தப்பி ஓடிய நிலையில் லாரி உரிமையாளர் தனக்கம்பட்டி பிரசன்னா 40, கருப்பையா 27, இருவரை கைது செய்து லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார். மேலும் தலைமறைவான மருதுதுரை, கருப்பையா, ராஜ்குமார் உள்ளிட்டோரை தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை