உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மேலுார்: கீழவளவு சையது அபுதாகிர் 38. மேலுாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று மதியம் தேங்கிய கழிவு நீரை வெளியேற்ற ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் பழைய மின் மோட்டாரை கொடுத்தனர். அதற்கு சையது அபுதாகிர் மின்இணைப்பு கொடுத்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். எஸ்.ஐ., பழனியப்பன் விசாரிக்கிறார்.

விபத்தில் ஒருவர் பலி

மேலுார்: அட்டப்பட்டி ரமேஷ் 21. சிங்கப்பூரில் கம்பி கட்டும் வேலை பார்த்தார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு நண்பர் அஜய் 21, டூவீலரில் அழைத்து சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. கீழவளவு மெயின்ரோட்டில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் இறந்தார். அஜய் மேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கீழவளவு எஸ்.ஐ., வேலுச்சாமி விசாரிக்கிறார்.

தன்னார்வலரை தாக்கியவர் கைது

மேலுார்: சேக்கிபட்டியைச் சேர்ந்தவர் தனலட்சுமி 32. ஆரம்பசுகாதார நிலையத்தில் பெண்கள் நலவாழ்வு தன்னார்வலர். நேற்று முன்தினம் உடப்பன்பட்டியில் மாத்திரை கொடுத்த போது தனலட்சுமிக்கும் அதே ஊரைச் சேர்ந்த அழகனுக்கும் 37, தகராறு ஏற்பட்டது. இதை தனலட்சுமி கணவர் செந்தில் 32, தட்டிக் கேட்டார். அழகன் இருவரையும் கட்டையால் தாக்கியதாக மேலவளவு எஸ்.ஐ., பிரகாஷ் கைது செய்தார்.

அரசு ஊழியரை மிரட்டியவர் கைது

வாடிப்பட்டி: கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் 59. மஸ்துார் பணியாளர்களுடன் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டார். குட்லாடம்பட்டி அஞ்சுகுழி ரோட்டில் சண்முகம் 22, வீட்டில் வாளியில் இருந்த நீரை கீழே ஊற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் செய்தனர். வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

ஐயப்ப பக்தர்கள் காயம்

ஒத்தக்கடை: நேற்று அதிகாலை திருச்சியில் இருந்து சீனி மூடைகளை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு ஒரு லாரி வந்தது. அந்தலாரி மதுரை விவசாயக் கல்லுாரி அருகே சபரிமலையில் இருந்து சிங்கம்புணரி சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மீது மோதியது.இதில் வேன் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இதில் மேலுார் மங்களாம்பட்டி நாகராஜ் 45, சிங்கம்புணரி காளாப்பூர் வைரமணிகண்டன் 28, மோகன் உட்பட 3 பக்தர்கள் பலத்த காயமடைந்தனர். ஒத்தக்கடை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை