வாகனம் மோதி ஒருவர் பலி
திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே நல்லமாநயக்கன்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் 19. நேற்று காலை கள்ளிக்குடி அருகே அவரது தோட்டத்திற்கு செல்வதற்காக விருதுநகர் ரோட்டில் எதிர் திசையில் டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை ) சென்றுள்ளார். அவருக்கு எதிரே மையிட்டான் பட்டி முத்துராஜா 65, சைக்கிளில் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க பாண்டியராஜன் பிரேக் பிடித்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. தலையில் காயம் அடைந்த பாண்டியராஜன் சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்த முத்துராஜா விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர். லாரி மீது ------------------------------கார் மோதல்
திருமங்கலம்: மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் டிரைவர் சுல்தான். நேற்று காலை இவரது காரில் ஏழு பேர் சிவகாசிக்கு சென்றனர். விருதுநகர் 4 வழிச் சாலை பைபாஸ் ரோட்டில், ராஜபாளையம் ரோடு 'அண்டர் பாஸ்' பாலம் அருகே சாலை நடுவில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விட்டுச் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் சுல்தான் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், நெடுஞ்சாலை ரோந்து மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் மீட்டனர். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். வாலிபர் கொலை
மதுரை: தத்தனேரி ராஜிவ்காந்தி நகர் சங்கர் மகன் கார்த்திக் 21. இவர்களுடன் உறவினர் செந்தில்குமார் 18, தங்கி இருந்தார். நேற்று காலை வீட்டில் கார்த்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்லுார் போலீசார் கூறுகையில், ''நேற்று காலை தலையில் கல்லை போட்டு கார்த்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். செந்தில்குமார் தலைமறைவாகி உள்ளதால் அவர் மீது சந்தேகம் உள்ளது. 2022ல் உடன் பிறந்த சகோதரரையும் தலையில் கல்லை போட்டு செந்தில்குமார் கொலை செய்துள்ளார்'' என்றனர். திருடியவர் கைது
மதுரை: திருநகர் ஆர்த்தி. ஆகஸ்டில் ராமேஸ்வரம் சென்ற போது வீட்டில் நகை, பணத்தை திருடிய அழகுமுருகனை போலீசார் கைது செய்தனர். திருட்டில் தொடர்புடைய திடீர்நகர் கருப்பையாவை 34, தேடி வந்தனர். நேற்று திருநகரில் எஸ்.ஐ., பேரரசி, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருப்பையாவை கைது செய்து 3 பவுன் நகையை மீட்டனர்.