| ADDED : ஜூன் 24, 2024 04:27 AM
மொபைல் பறித்த இருவர் கைதுமதுரை: தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் முதலாவது சந்து பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாசின் 42. இவர் சின்னக் கடை வீதியில் நடந்து சென்றபோது இருவர் அவரை வழிமறித்தனர். ஆபாசமாக திட்டியபடி, அவரை சரமாரியாக தாக்கினர். அவரிடமிருந்து மொபைல்போன், ரூ. 6500 ஐ பறித்துச் சென்றனர். போலீசார் தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த தாஹிர், தெற்கு மாரட் வீதி அஷ்ரப் அலி ஆகியோரை கைது செய்தனர்.அண்ணன் தம்பி கைதுமதுரை: வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் திருக்குமரன் 28 . ஆட்டோ ஓட்டுனரான இவர், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள பார் முன்பாக நின்றிருந்தார். அப்போது வில்லாபுரத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் முகமது முஜிமில், முகமது அக்பர் ஆகியோர் திருக்குமரனிடம் தகராறில் ஈடுபட்டனர், திருக்குமரனை சரமாரியாக தாக்கினார். போலீசார் முகமது முஜிமில், முகம்மது அக்பர் ஆகியோரை கைது செய்தனர்.கஞ்சாவுடன் இருவர் கைதுமதுரை: கரிமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார், பெத்தானியாபுரம் மேட்டு தெருவில் ரோந்து சென்றார். அங்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் ஒருவரை பிடித்தனர். விசாரணையில், அவர் ஆனையூர் மல்லிகை நகர் கிஷோர் 29 என்று தெரிந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.தல்லாகுளத்தில் வாலிபர் கைது மதுரை: தல்லாகுளம் போலீஸ் எஸ்.ஐ., ஆதிகுந்த கண்ணன். ரேஸ்கோர்ஸ் ரோடு இளைஞர் விடுதி அருகே ரோந்து சென்றார். அங்கு சந்தேகப் படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவனியாபுரம் எம். எம்.எஸ். காலனி கோபி கிருஷ்ணன் 19, என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.ஆயுதங்களுடன் வாலிபர்கள் கைதுமதுரை: தெப்பக்குளம் போலீஸ் எஸ்.ஐ., சுபத்ரா தெப்பக்குளம் பகுதி வைகை தென்கரைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் இரண்டு வாலிபர்களை பிடித்தார். விசாரணையில் அனுப்பானடி சக்தி விநாயகர் கோவில் தெரு கணேஷ் என்ற பிள்ளையார் 24, முத்து காமாட்சி பிள்ளை சந்து ஜெயராம் என்ற பல்சர் 19, என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்து போலீசார் வாள் ஒன்றை பறிமுதல் செய்தனர். அவ்வழியாக செல்வோரிடம் வழிப்பறி செய்ய பதுங்கி இருந்ததாக தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.பஸ் மோதி ஒருவர் சாவுமதுரை: பொன்மேனி முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 42. நேற்று காலை மோட்டார் சைக்கிளில் கோச்சடைக்கு சென்றார். முன்னால் சென்ற அரசு பஸ்சை, அவர் முந்தி செல்ல முயன்றார். அவரது பைக், கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பக்கவாட்டில் மோதியது. கீழே விழுந்த கார்த்திகேயன் மீது பஸ்சின் பின் சக்கரங்கள் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் ஒருவர் பலிபேரையூர்: பி.ஆண்டிபட்டி குருசாமி 75. முனியாண்டி 38. இருவரும் எம்.சுப்புலாபுரம் செல்ல டூ வீலரில் பாப்பையாபுரம் விலக்கு அருகே சென்றனர். அப்போது எதிரே ராஜபாளையத்தில் இருந்து மதுரை சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் குருசாமி இறந்தார். முனியாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.