போலீஸ் செய்திகள்...
கிணற்றில் விழுந்து பெண் பலிதிருமங்கலம்: மைக்குடி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அருணகிரி மனைவி தமிழ்ச்செல்வி 22, இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளாகிறது. நான்கு மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்த போது அங்கிருந்த கிணற்றில் தமிழ்ச்செல்வி தவறி விழுந்து உயிரிழந்தார். திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் தமிழ்செல்வியின் உடலை மீட்டனர். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் மோதி மூதாட்டி பலிமதுரை: சக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் 70. நேற்று காலை அரசு பஸ்சில் கீழவாசல் வந்தார். பஸ்சின் முன்புறம் ரோட்டை கடந்து சென்றார். அவரை கவனிக்காத டிரைவர், பஸ்சை எடுத்தபோது டயரில் சிக்கி பாண்டியம்மாள் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.