போலீஸ் செய்திகள்
பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது
மதுரை: பனங்காடி செக்போஸ்ட் அருகே டேனியல் என்பவரின் ரெடிமேட் மரக்கதவு தயாரிக்கும் கம்பெனிமீது நேற்றுமுன்தினம் அதிகாலை மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.மரப்பலகைகளை ஒட்டச் செய்யும் 'பேஸ்ட்' டப்பாக்கள் காலியானதும்,அதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வாங்கி அதன் வாசனையை நுகர்ந்து போதை ஏற்றி வந்தனர்.இதனால் கம்பெனி ஊழியர்கள் தரமறுத்ததால் ஆத்திரமுற்று பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது.இதுதொடர்பாக வாகைக்குளம் செல்வபூமி நகர் மாரிமுத்து 23, யோகேஷ்குமார் 19 மற்றும் 16 வயது சிறுவனை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்ற மூவர் கைது
மேலுார்: எஸ்.ஐ., தினேஷ் தலைமையில் போலீசார் தனியாமங்கலம் பகுதியில் ரோந்து சென்ற போது கஞ்சா விற்ற ஜெயங்கொண்ட நிலை செந்தமிழ்ச் செல்வன் 24, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி பிரசாந்த் 24, தனியாமங்கலம் கவியரசு 27 மூவரை கைது செய்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.