உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது எழுமலை: கோடாங்கிநாயக்கன்பட்டி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாடையம்பட்டி நல்லதம்பி 29, திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு மருதுபாண்டி 28, ஆகியோர் 8 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து கஞ்சாவையும், ரூ.2500 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டதாரி பலி அலங்காநல்லுார்: மதுரை சிம்மக்கல் பகுதி பாலமுருகன் மகன் மோகனசுந்தரம் 23. பொறியியல் பட்டதாரி. நேற்று முன்தினம் நண்பர்களுடன் அலங்காநல்லுார் கரட்டு காலனி பெரியாறு பாசன கால்வாயில் குளித்த போது இழுத்து செல்லப்பட்டார். நேற்று காலை இவரது உடலை தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் பூதக்குடி கணபதி நகர் பகுதி பாசன கிளை கால்வாயில் மீட்டனர். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். திருடியவர் கைது மதுரை: உலகனேரி தங்கமுத்து தெரு கார்த்திக், 34. மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ரூ.8 ஆயிரம் திருடு போயிருந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நெல்பேட்டை சல்மான்கானை 30, மாட்டுத்தாவணி போலீசார் கைது செய்தனர். மாணவர் பலி மேலுார்: அட்டப்பட்டி பாண்டி மகன் காவியன் 13. தும்பைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர் விநாயகர் சிலை செய்வதற்காக கண்மாயில் மண் எடுக்க சென்றார். பூவந்தி தனியார் கல்லுாரி பஸ் மோதியதில் காவியன் இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ