போலீஸ் செய்திகள்... மதுரை
வாலிபருக்கு அரிவாள் வெட்டு வாடிப்பட்டி: பரவை ஊர்மெச்சிகுளம் பாரதி தெரு கண்ணன் 34, வாடிப்பட்டியில் தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் கிராம மந்தையில் உள்ள நாடக மேடையில் மது அருந்தியவர்களை கண்ணன் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் கண்ணனை அரிவாளால் முகம், தலையில் வெட்டி தப்பினர். சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.ஐ.,மாயாண்டி மற்றும் போலீசார் விசாரித்தனர். தேனுார் சேம்பர் பகுதி மயூர்கவுதம், தாராப்பட்டி லோகநாதன், மணிகண்டனை தேடி வருகின்றனர். மின்னல் தாக்கி மாடுகள் பலி எழுமலை: மல்லப்புரம் மீனாட்சி மூப்பன்பட்டியைச் சேர்ந்தவர் பரமன் 48.நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்தில் பால்கறக்கும் நிலையில் ஒன்றும், மற்றொரு மாடும் என 2 பசுமாடுகளை கட்டி வைத்துள்ளார். இரவில் பலத்த காற்று, மின்னல், இடியுடன் மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் இரண்டு மாடுகளும் பலியாகின. வருவாய்த்துறையினர், எம். கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.