உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  போலீசாருக்கான அகம்: 293 குறைகளுக்கு தீர்வு

 போலீசாருக்கான அகம்: 293 குறைகளுக்கு தீர்வு

மதுரை: மதுரை நகரில் போலீசாரின் துறை சார்ந்த குறைகளை ஒருவாரத்திற்குள் தீர்வு காணும் வகையில் கடந்த அக்.,24ல் 'அகம்' என்ற திட்டத்தை கமிஷனர் லோகநாதன் துவக்கினார். 94981 81313 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் போலீசார் தங்களது இடமாற்றம், சம்பள பிரச்னை உள்ளிட்ட அனைத்து வகையான குறைகளையும் தெரிவிக்கலாம். இதுவரை 450 புகார்கள் பெறப்பட்டு 293க்கு தீர்வு காணப்பட்டன. மற்றவை தீர்வு காணும் நிலையில் உள்ளன. கமிஷனர், தலைமையிடத்து துணைகமிஷனர் உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பில் இத்திட்டம் செயல்படுவதால் விரைவில் தங்களது குறைகளுக்கு தீர்வு கிடைப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ