போலீஸ் வாகனங்கள் ஏலம்
மதுரை: தமிழ்நாடு சிறப்புக்காவல் 6ம் அணியின் மதுரை அலுவலக வளாகத்தில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விட அணியின் தளவாய் ஆனந்தன் உத்தரவிட்டுள்ளார். பொது ஏலம் ஜூலை 23 காலை 10:00 மணிக்கு மதுரை அலுவலக வளாகத்தில் நடைபெறும். வாகனங்களை ஜூலை 21 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.ஏலம் எடுக்க விரும்புவோர் ஜூலை 23 காலை 7:00 மணிக்குள் ரூ.5000 முன்தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையை ஜி.எஸ்.டி., வரியுடன் உடனே செலுத்த வேண்டும்.