மதுரை : மதுரையில் பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், அமைப்புகள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் லோகநாதன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள், போலீசார் கொண்டாடினர். நகர் காங்., அலுவலகத்தில் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, மனித உரிமை துறை மாநில பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், துணைத்தலைவர்கள் பாலு, பாண்டியன், சோனியா பாய், கவுன்சிலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மதுரை ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழு சார்பில் குறும்பட இயக்குநர் விக்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது. நடிகர்கள் பாலாஜி, மனோகரன், மீசை தங்கராஜ், அழகப்பன், சண்முகம், செந்தில் ராஜன், கோடீஸ்வரன், வேல்முருகன், எழுத்தாளர் விவேக் ராஜி முன்னிலை வகித்தனர். செனாய்நகர் சேவாலயம் மாணவர்கள் இல்லத்தில் சமூக ஆர்வலர் பாரதி தலைமையில் நடந்த விழாவில் இல்லம் காப்பாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு சதீஷ், முகமது பாரூக், ரஷித், கிரேசியஸ், அசோக்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மதுரை உத்தங்குடி ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் பொதுச் செயலாளர் வினோத் தலைமை வகித்தார். சினிமா இயக்குனர் குகன், வழக்கறிஞர் முத்துக்குமார், தொழிலதிபர் சோலையழகு முன்னிலை வகித்தனர். சங்கமேலாளர் பாலா வரவேற்றார். சினிமா தயாரிப்பாளர்கள் விபின், சிவகாசிராஜ் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கினர். முதியோருக்கு நிம்மதி தருவது சொந்த உறவு இல்லங்களா, முதியோர் இல்லங்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. துணை நடிகர்கள் பலர் பங்கேற்றனர். பள்ளி, கல்லுாரி
* வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பரிசு வழங்கினர். ஆசிரியைகள் இந்துமதி, நாகேஸ்வரி, கலைமதி, விஜயசாரதி ஏற்பாடு செய்தனர். உழவர் தினம், திருவள்ளுவர் தினம் குறித்து ஆசிரியை சாந்தி விளக்கினார்.* புதுார் அல்அமீன் மேல்நிலை பள்ளியில் தலைமையாசிரியர் ேஷக்நபி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உதவி தலைமையாசிரியர்கள் ஜாகிர் உசேன், ரஹமத்துல்லா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. * மா.சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை சி.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதையொட்டி ஒழுக்கமே உயர்வு' என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் சுப.மாரிமுத்து, எழுமலை அரசு பள்ளி ஆசிரியர் கணேசன் ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் கணேசன் வரவேற்றார். திருப்பரங்குன்றம்
* சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமசுப்ரமணியன், வெங்கடேஷ், முதல்வர் மௌஷமி துறைத்தலைவர்கள் உமாமகேஸ்வரி, விஜயலட்சுமி, மஞ்சுளா, மேகலா, ரோகிணி, ரேணுகாதேவி, கார்த்திகா தேவி, பேராசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகள் நடந்தன. உசிலம்பட்டி
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழாவில் கண்காணிப்பாளர் மணிவண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மாதவன், செவிலியர் கண்காணிப்பாளர் கமலா, டாக்டர் அப்துல் பாரி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரியில் முதல்வர் ஜோதிராஜன் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். திருமங்கலம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் ஒன்றிய தலைவர் லதா தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் வைத்தனர். இதில் துணைத் தலைவர் வளர்மதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர் கைலாசம், பாண்டியன், கவுன்சிலர்கள் ஆண்டிச்சாமி, மின்னல் கொடி, செல்வம், ஊழியர்கள் கலந்து கொண்டனர். மேலுார்
ஆட்டுக்குளம் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா பள்ளி பொங்கல் விழாவில் நீதிபதி கணேசன், தாசில்தார் செந்தாமரை, டாக்டர் ரேவதி, தாளாளர்கள் பாக்கியம், சுதா நாகேஸ்வரன், முதல்வர் கண்ணன் பங்கேற்றனர். நீதிமன்றத்தில் நீதிபதிகள் முத்துகிருஷ்ணமுரளிதாஸ், கோகுலகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயராமன், செயலாளர் சுரேந்தர், பொருளாளர் மேசுவர்ணன், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.லதாமாதவன் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு போட்டி நடந்தது. செயல் அலுவலர் முத்துமணி, காந்திநாதன், பி.ஆர்.ஓ. பிரபாகரன், கல்லுாரி முதல்வர்கள், துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலுார் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகள் ஒன்றிய தலைவர் பொன்னுச்சாமி, நகராட்சியில் தலைவர் முகமதுயாசின், கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் சீமா, இளநிலை உதவியாளர் ஜோதி பங்கேற்றனர்.