உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் கோயிலில் பூர்வாங்க பூஜை

திருப்பரங்குன்றம் கோயிலில் பூர்வாங்க பூஜை

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நேற்று பூர்வாங்க பூஜை நடந்தது.மாலை 6:30 மணிக்கு திருவாட்சி மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் புனித நீர் அடங்கிய குடம் அலங்கரித்து வைக்கப்பட்டது. மங்கள இசையுடன் துவங்கி யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை முடிந்து புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அனுமதி பெறுதல் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் பூஜை, தீபாராதனை முடிந்து அனுமதி பெறப்பட்டது. திருமுறை பாராயணம் முடிந்து தீபாராதனை நடந்தது. ஜூலை 10 முதல் யாக சாலை பூஜை துவங்குகிறது.ஸ்தானிக சிவாச்சாரியார் ராஜா சந்திரசேகர் தலைமையில் இப்பூஜை நடந்தது.அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மத்தேவன், ராமையா, துணை கமிஷனர் சூர்யநாராயணன், தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ