உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பிரதமர் நிகழ்ச்சி: மாணவிகள் ஆர்வம்

 பிரதமர் நிகழ்ச்சி: மாணவிகள் ஆர்வம்

மதுரை: மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி மாணவிகள், பிரதமர் மோடி பங்கேற்ற 'போதைப் பொருள் இல்லாத இந்தியா' பிரசார நிகழ்ச்சியை நேற்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ​மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் 'மை பாரத்' அமைப்பு சார்பில் நடந்த போதைப்பொருள் இல்லாத இந்தியா பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த 'லைவ்' நிகழ்ச்சியை மாணவிகள் பார்க்கும் வகையில் கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்வர் சந்திரா தலைமை வகித்தார். 'மை பாரத்' மாவட்ட இளைஞர் அலுவலர் ஹரிகிருஷ்ண வர்மா, கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் ஜெபப்பிரியா ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !