உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தலைமையாசிரியர் வேண்டுகோள்

தலைமையாசிரியர் வேண்டுகோள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் சூரக்குளம் வந்த எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பாவிடம், அப்பகுதி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு கோரிக்கை விடுத்தார்.பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை 8 வகுப்பறைகள் உள்ளன. விரைவில் பள்ளியில் அரசு சார்பில் ஹைடெக் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு ஒரு அறை ஒதுக்க வேண்டி உள்ளது. இதனால் ஒரு வகுப்பு மாணவர்கள்அமர்வதற்கு இடம் இல்லாத நிலை ஏற்படும். மாணவர்கள் வசதிக்காக 2 வகுப்பறை கட்டடங்கள் புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்றார். எம்.எல்.ஏ., நிதி மூலம் வகுப்பறை கட்டடம் கட்டப்படும் என தலைமை ஆசிரியரிடம், ராஜன் செல்லப்பா உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ