கராத்தே போட்டி மதுரைக்கு பரிசு
திருப்பரங்குன்றம்: தேனியில் நடந்த மாநில கராத்தே போட்டிகளில் மதுரை வீரர்கள் பதக்கங்களை வென்றனர். பல்வேறு வயது பிரிவுகளில் நடந்த லியோ கப் கராத்தே போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற மதுரை கோஜூ காய் ஸ்போர்ட்ஸ் கராத்தே வீரர்கள் கட்டா பிரிவில் 7 வயது சிவானி பாலா முதல் பரிசு, பிராணிக்கா மேரி மூன்றாம் பரிசு, 10வயது பிரிவில் யுவானிஸ்ரீ முதல் பரிசு, 13 வயது பிரிவில் சசிதரா மூன்றாம் பரிசு, ஆண்கள் பிரிவில் சீனிவாசன் முதல் பரிசு, 12 வயது பிரிவில் விக்னேஷ் மூன்றாம் பரிசு வென்றனர். வென்ற வீரர்களை தலைமை பயிற்சியாளர் கார்த்தி, துணை பயிற்சியாளர் முனீஸ்வரன் பாராட்டினர்.