பரிசளிப்பு விழா
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் தடகள, குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை பரிசு வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், பயிற்சியாளர்கள் ரஞ்சித்குமார், குமரேசன், விளையாட்டு அலுவலர் (ஓய்வு) பிரகாசம் கலந்து கொண்டனர்.