உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாக்., ஆதரவு பேச்சு: எம்.எல்.ஏ., கைது

பாக்., ஆதரவு பேச்சு: எம்.எல்.ஏ., கைது

குவஹாத்தி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்தியதாக்குதலில், சுற்றுலா பயணியர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று முன்தினம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், 'நேரடியாகவோ மறைமுகவாகவோ பாகிஸ்தானை ஆதரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது' என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை ஆதரித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எட்டு பேரை அசாம் போலீசார் கைது செய்துஉள்ளனர். இதில், அசாம் மாநில எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாமும் ஒருவர்.இவர் '2019ல் நடந்த புல்வாமா தாக்குதலும், ஏப்.,22ல் நடந்த பஹல்காம் தாக்குதலும் அரசாங்கத்தின் சதித்திட்டங்கள்' என்று கூறியதை அடுத்து, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைதான மற்ற இருவர் சில்சாரை சேர்ந்தவர்கள். இதுதவிர ஹைலகாண்டி, மோரிகான், சிவசாகர், பார்பேட்டா, பிஷ்வநாத்தைச் சேர்ந்த தலா ஒருவர், என எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை