உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விதை விற்பனைக்கு தடை

விதை விற்பனைக்கு தடை

மதுரை: மதுரை மாவட்டத்தில் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 570 மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக துணை இயக்குநர் வாசுகி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: நெல்பேட்டை, நாகமலை புதுக்கோட்டை, காளவாசல் பகுதி விதை விற்பனை நிலையங்களில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோள விதைகள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.பதிவுச்சான்று இல்லாத 218 கிலோ எடையுள்ள காய்கறி விதைகள், 822 கிலோ நெல் விதைகள் கண்டறியப்பட்டது. ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 570 மதிப்புள்ள இந்த விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பதிவுச்சான்று காலம் முடிவு பெற்ற விதை குவியலை இருப்பில் வைக்கக்கூடாது; பதிவுச்சான்று பெற்ற விதைகள் மட்டுமே விவசாயிகளுக்கு விற்க வேண்டும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோள விதைகள் விற்கப்படவில்லை என்றார். திருப்பரங்குன்றம் விதை ஆய்வாளர் அகிலா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ