உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவமனையில் திட்ட இயக்குநர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் திட்ட இயக்குநர் ஆய்வு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ திட்டங்கள் குறித்து தமிழக சுகாதார இயக்க திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார். டீன் அருள் சுந்தரேஷ்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ., சரவணன் உடனிருந்தனர். இதயவியல் துறைத்தலைவர் செல்வராணி துறை சார்பில் கோரிக்கை மனுவை திட்ட இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.அதில், இதயவியல் துறையில் மாதம் 331 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்வரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் 'ஸ்டென்ட்' பொருத்துதல், 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்துதல், துளையிடுவதற்கான கருவிகள், பிற உபகரணங்களை பயன்படுத்துகிறோம். ஆனால் 30 சதவீத நோயாளிகளிடம் காப்பீட்டு திட்ட அட்டை இல்லை. இவர்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்க முடியவில்லை. மருத்துவமனை மேம்பாட்டு நிதியிலும் செலவு செய்ய முடியாத நிலை உள்ளதால் அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.சென்னை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கார்பஸ் நிதியை பிடித்து கொண்டு மீதியை தருகின்றனர். எங்களுக்கு கருவிகள் வாங்க வேண்டியிருப்பதால் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை