உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் துணைத் தலைவர் தவுலத் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சங்க மாநில தலைவர் பரமேஸ்வரன் பேசியதாவது: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 தர வேண்டும். இத்துறையில் அதிக பெண் பணியாளர்கள் இருக்கின்றனர். மகளிருக்கான உதவித் தொகையும் வழங்கவில்லை. இலவச மருத்துவ காப்பீடு, மருத்துவ உதவித்தொகை, இறந்தபிறகு அளிக்கும் தொகை, பொங்கல் தொகை வழங்க வேண்டும். அரசு எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் ஏப். 10ல் மாநிலம் தழுவிய மறியல் நடைபெறும்'என்றார்.அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பால்முருகன், பொருளாளர் ஜெயச்சந்திரன், சத்துணவு ஊழியர்கள் சங்க மாநிலச் செயலாளர் பாண்டிசெல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ