உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரையில் மறியல்: 711 பேர் கைது

 மதுரையில் மறியல்: 711 பேர் கைது

மதுரை: தொழிலாளர் விரோத 4 சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, மதுரையில் சி.ஐ.டி.யூ., சங்கம் சார்பில் மறியலில் ஈடுபட்ட 227 பெண்கள் உட்பட 711 பேர் கைது செய்யப்பட்டனர். பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர்கள் தெய்வராஜ், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லெனின் தொடங்கி வைத்தார். 200 பெண்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர். வாடிப்பட்டியில் மாவட்ட குழு சி.ஐ.டி.யு., இந்திய தொழிற்சங்க மையம், வாடிப்பட்டி பொது தையல் கட்டுமான உள்ளாட்சி சங்கங்கள் சார்பில் நடந்த மறியலுக்கு மாவட்ட தலைவர் அரவிந்தன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், துணை செயலாளர் ஜீவானந்தம், துணைத் தலைவர் தெய்வம், தையல் சங்க மாவட்ட குழு இருளப்பன் பங்கேற்றனர். சமயநல்லுாரில் மாவட்ட பொருளாளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.கல்லுப்பட்டியில் சி.ஐ.டி.யூ., மாவட்டச் செயலாளர் மலைகண்ணன் தலைமையில் மறியல் நடந்தது. மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 27 பெண்கள் உட்பட 111 பேர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ