புதுச்சேரி பெண் நெல்லையில் பலாத்காரம்: 2 அரசு ஊழியர் கைது
திருநெல்வேலி : புதுச்சேரியை சேர்ந்த பெண்ணை வீட்டுக்கு அழைத்து மதுபானம் கொடுத்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர், அரசு போக்குவரத்து கழக டிரைவர் கைது செய்யப்பட்டனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் 29 வயது பெண் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக பணிபுரிந்து வருகிறார்.அடிக்கடி ரயிலில் திருநெல்வேலி வருவது வழக்கம்.ஒரு கிறிஸ்துவ பிரசங்க கூட்டத்திற்கும் அடிக்கடி சென்று வந்தார்.திருநெல்வேலி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே கார்ட் ஆக பணி புரியும் சுபாஷ் 37, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.ஆரம்பத்தில் ரயில் வருகை குறித்த தகவல்களை மட்டுமே போனில் கேட்டு பழகியவர் பிறகு நேரில் சந்தித்தார்.நேற்று முன்தினம் சுபாஷ், மானுார் அருகே வெங்கல பொட்டலில் உள்ள தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். அப்போது வீட்டில் அவரது மனைவி மகன், மகள் இல்லை.சுபாஷ் தனது நண்பர் மானுார் ரஸ்தாவை சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் முருகேசனை 37, வீட்டுக்கு அழைத்தார்.மூவரும் மது அருந்தினர். அப்போது சுபாஷ், முருகேசன் பெண்ணை பலாத்காரம் செய்தனர். மயக்கம் தெளிந்த பெண் தான் பாதிக்கப்பட்டதை அறிந்து திருநெல்வேலி மாவட்ட அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கூட்டு பலாத்காரம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.