சுங்கவரி மோசடியில் தண்டனை
மதுரை: தனியார் நிறுவன பங்குதாரர் ராமகிருஷ்ணன். இவர் மும்பை, கொச்சி, கரூரில் சிலருடன் சேர்ந்து மத்திய அரசிடம் ரூ. 3 கோடியே 48 லட்சத்து 29 ஆயிரத்து 568 சுங்கவரி விலக்கு பெறுவதற்காக வெளிநாட்டிலிருந்து ஜவுளி கச்சா பொருட்களை இறக்குமதி செய்தார். அதற்கு ஈடாக மதிப்பற்ற அழுக்கடைந்த கழிவு துணிகளை ஏற்றுமதி செய்துள்ளார். இவர் சுங்கவரி மோசடியில் ஈடுபட்டதாக சி.பி.ஐ.,வழக்கு பதிந்தது. மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ராமகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.