புஷ்பாஞ்சலி
மதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில்சுதந்திரப் போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதனின்நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத் தலைவர் ரவி தலைமையில் புஷ்பாஞ்சலி நடந்தது. மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தையர் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் சீனிவாசன், கிளை நிர்வாகிகள் வெங்கடேசன்,சாம்பசிவம், குழந்தைசாமி, வினோத், ராமமூர்த்தி, ராமச்சந்திரன், வெங்கட சுப்பிரமணியன், ரமணன் உள்ளிட்டோர் வாஞ்சிநாதன் குறித்து பேசினர். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டச் செயலாளர் ஸ்ரீராமன் நன்றி கூறினார்.