மழை காதல் வெயில் பிரிவு
ஆசிரியர் : ஏ.ஜே. பிராங்க்ளின் வெளியீடு : இறைவி பதிப்பகம் 84, மாரியம்மன் கோயில் தெரு சத்தியவாடி, மாவலவாடி அஞ்சல் திருவண்ணாமலை - 604 406 அலைபேசி : 93613 72414 பக்கம் : 144 விலை : ரூ.250 ம ழை காதல் வெயில் பிரிவு-ஒரு மென்மையான காதல் அனுபவத்தை மனித மனத்துடன் இணைத்து சொல்லும் நாவல். மழை - காதலின் தொடக்கமும் ஈரத்தையும், வெயில் - உணர்ச்சிகளின் தீவிரத்தையும், பிரிவு - வாழ்வின் தவிர்க்க முடியாத வலியையும் நாவல் முழுவதும் விரிக்கின்றன. அதிக சிக்கலான திருப்பங்கள் இல்லாவிட்டாலும், மெதுவாக நகரும் கதை சொல்லல் இந்த நுாலின் தனித்துவம். இளைய தலைமுறையினரையும், காதலை அனுபவித்தவர்களையும் ஒரே நேரத்தில் நெருக்கமாக உணர செய்யும் படைப்பு. உணர்வுகளை நேசிக்கும் வாசகர்களுக்கான மனதோடு பேசும் நாவல். -காந்த்