உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் தேங்கும் மழைநீர்

பள்ளியில் தேங்கும் மழைநீர்

வாடிப்பட்டி: பரவை பேரூராட்சி ஊர்மெச்சிகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி முன் தேங்கும் மழை நீரால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இப்பள்ளி முன் உள்ள மந்தையில் சிறு மழைக்கும் நாள் கணக்கில் தண்ணீர் தேங்குகிறது. இவ்வழியாக வாகனங்கள் சென்று வருவதால் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இந்த மந்தை பகுதியை சுற்றி பள்ளி, ரேஷன் கடை, நாடக மேடை உள்ளது. இவ்வழியாக மந்தை பகுதியை கடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.பேரூராட்சி நிர்வாகம் மந்தை பகுதியில் மழைநீர் தேங்காதவாறு, மண் அடித்து தண்ணீர் தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி