உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளாச்சேரியில் அமர்ந்த கோலத்தில் தியானம் செய்த ராமர், சீதை

விளாச்சேரியில் அமர்ந்த கோலத்தில் தியானம் செய்த ராமர், சீதை

திருநகர்: 'மதுரை விளாச்சேரியில் தற்போதுள்ள பட்டாபிஷேக ராமர் கோயில் 1406ம் ஆண்டில் இருந்ததாக கோயிலில் உள்ள கல்வெட்டுசெய்திகள் கூறுவதாக' திருப்பணிக் குழுச் செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இலங்கையில் ராவணனை வதம் செய்தபின்பு, ராமபிரான், சீதை ஆகியோர் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தனர். அங்கிருந்து பட்டாபிேஷகத்திற்காக லட்சுமணன், வானர சேனைகளுடன் அயோத்தி செல்லும் வழியில் விளாச்சேரி பகுதி மலைகளில் ஓய்வு எடுத்துள்ளனர். அந்த அமைதியான சூழலில் ராமபிரானும், சீதையும் அமர்ந்த கோலத்தில் தற்போதைய பட்டாபிஷேக ராமர் கோயில் உள்ள இடத்தில் தியானம் செய்துள்ளனர்.அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ராமர், சீதை அமர்ந்த கோலத்திலும், லட்சுமணன் நின்ற கோலத்திலும் மூலவர்களாக கற்சிலைகள் வடிவமைக்கப்பட்டு இன்றளவும் காட்சியளிக்கின்றனர். இதற்கு தினமும் பூஜைகள் நடக்கிறது. ராமர் அமர்ந்த கோலத்தில் தியானம் செய்யும் அருங்காட்சியை இங்கு மட்டுமே காண முடியும்.இன்று அயோத்தி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் அதே நேரத்தில் இங்கு ராமபிரானுக்கும், சீதைக்கும் அபிஷேகங்கள் முடிந்து, சிறப்பு அலங்காரமாகி, பூஜை, தீபாரதனை, அன்னதானம் நடக்கிறது. மாலையில் ராமநாம பஜனை நடைபெறும். அயோத்தி செல்ல முடியாத பக்தர்கள் இத்திருத்தலத்தில் பட்டாபிஷேக ராமபிரானை தரிசிக்கலாம், என்றார். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ