உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷன் அரிசி கடத்தல் இன்பார்மர் குறித்து கடத்தல்காரர்களுக்கு இன்பார்ம் மதுரையில் எஸ்.ஐ., இடமாற்றம்

ரேஷன் அரிசி கடத்தல் இன்பார்மர் குறித்து கடத்தல்காரர்களுக்கு இன்பார்ம் மதுரையில் எஸ்.ஐ., இடமாற்றம்

மதுரை : மதுரையில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவித்த பெண் குறித்து கடத்தல்காரர்களுக்கு தகவல் கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., ஒருவர், அப்பிரிவில் இருந்து மாற்றப்பட்டார்.மதுரை பழங்காநத்தம் ரேஷன் கடை ஒன்றில் ஜன., ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. இதை அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக ஆர்வலருக்கு அனுப்பினார். அந்த வீடியோவை அவர் உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., ஒருவருக்கு மட்டும் அனுப்பினார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணை தேடி வந்த கடத்தல்காரர்கள், வீடியோ எடுத்த அலைபேசியை மிரட்டி பறித்துச்சென்றனர். இதனால் சமூக ஆர்வலருக்கு எஸ்.ஐ., மீது சந்தேகம் ஏற்பட்டு கேட்டபோது அதுபோன்ற சம்பவம் நடந்ததாக தனக்கு தகவல் வரவில்லை என சமாளித்தார்.இதுகுறித்து உயர்அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து சமூக ஆர்வலரிடம் டி.எஸ்.பி., செந்தில் இளந்திரையன் விசாரித்தார். அதன் அடிப்படையில் எஸ்.ஐ., மீது துறை ரீதியான விசாரணை நடந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் இப்பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இதற்கிடையே 'நிர்வாக காரணங்களுக்காக' இப்பிரிவின் இன்ஸ்பெக்டர் வனிதா சென்னை தலைமையிடத்திற்கும், எஸ்.ஐ., சிவபிரகாசம் மதுரை நகருக்கும் இடமாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை