வாசகர் வட்டம் நுால் வெளியீடு மற்றும் நினைவஞ்சலி கூட்டம்
மதுரை: மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் மதுரை வாசகர் வட்டம், நுால் வெளியீடு மற்றும் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. அமைப்பாளர் சண்முகவேலு வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி அறிக்கை அளித்தார். வானதி ராமனாதன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் தினேஷ் குமார், கவிஞர் ரவி எழுதிய 'இறையன்பு கருவூலம்' நுாலை வெளியிட்டு மதிப்புரை வழங்கினார். மற்றொரு நுாலான 'கு. ஞானசம்பந்தன் கருவூலம்' என்ற நுாலை வெளியிட்டு, த.மு.எ.க.ச., பாஸ்கரன் பேசினார். நுாலாசிரியர் ரவி ஏற்புரை வழங்கினார். அவரது மனைவி ஜெய் சித்ராவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வரதராஜன், முத்து சிதம்பரம், செந்துாரன், அழகுராஜ், பிரியதர்சினி, பன்னீர் செல்வம் பங்கேற்றனர். சண்முகவேலு நன்றி கூறினார்.