உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதலாக 12 அறைகள் கட்ட ரூ.300 கோடிக்கு பரிந்துரை

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதலாக 12 அறைகள் கட்ட ரூ.300 கோடிக்கு பரிந்துரை

தற்போதைய மாவட்ட நீதிமன்ற வளாக கட்டடம் 1970 ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கு சிவில், கிரிமினல் உள்ளிட்ட பல்வேறு வகை வழக்குகளை விசாரிக்க 45 நீதிமன்ற அறைகள், அலுவலகங்கள் உள்ளன.வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு ரூ.166 கோடியில் கூடுதல் கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக 2023 மார்ச் 25 ல் நடந்த விழாவில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடிக்கல் நாட்டினார். அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கட்டுமானப் பணி 2023 டிச.1 ல் துவங்கியது. எதிர்காலத்தில் கட்டட விரிவாக்கம் செய்ய வேண்டியதை கருத்தில் கொண்டு 10 மாடிகளை உருவாக்கும் வகையில் வலுவாக அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது அடித்தள பகுதி, தரைத்தளம், 3 மாடிகள் அமைக்கப்படுகிறது. அடித்தளத்தில் 200 கார்கள், தரைத்தளத்தில் கார்கள், டூவீலர்கள் நிறுத்த இட வசதி, தபால் நிலையம், வங்கி, கேன்டீன், டிரைவர்களுக்கு ஓய்வறை வசதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு நுழைவு வாயில் வழியாக நீதிபதிகள், தெற்கு நுழைவு வாயிலில் மக்கள், கிழக்கு, மேற்கு நுழைவு வாயில் வழியாக வழக்கறிஞர்கள் சென்றுவர வசதி செய்யப்பட்டுள்ளது.முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களில் தலா 6 நீதிமன்றங்கள் (மொத்தம் 18 ), அலுவலகங்கள், ஆவணங்களை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டக அறை, ஆஜர்படுத்தப்படும் கைதிகளை பாதுகாப்பதற்கான அறை உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி 'போக்சோ' வழக்குகளை விசாரிக்க முதல்தளத்தில் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அறைகள் விரிவாக உள்ளதை பின்பற்றி, மாவட்ட நீதிமன்ற இப்புது கட்டடத்தில் ஒவ்வொரு நீதிமன்ற அறையும் 1200 சதுர அடியில் மைக், ஸ்பீக்கர், தீயணைப்பு கருவிகள் என நவீன வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.மழைநீர் வடிகால், கழிவு நீர் சுத்திகரிப்பு வசதி, நீதிமன்ற நுழைவு வாயிலுள்ள குளத்தை மேம்படுத்தி மரங்கள் நடுதல் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது 90 சதவீத பணி நிறைவுற்றுள்ளது.2025 மே 31க்குள் பணி முழுமையடையும். புது கட்டடத்தில் மேலும் 12 நீதிமன்ற அறைகள் அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்ய திட்ட மதிப்பீடு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஏப் 15, 2025 16:18

12 நீதிமன்ற அறைகள் அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்ய திட்ட மதிப்பீடு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது???? ஒரு நீதிமன்ற அறை ரூ 25 கோடியா??? ரூ 10,000 ஒரு சதுர அடி என்று வைத்துக்கொண்டால் கூட 25,000 சதுர அடியா ஒரு ரூம் ???அதாவது 80 அடி அகலம் ரூ எடுத்துக்கொண்டால் கூட 310 அடி நீளமா???வெறும் ஒரே ரூம் என்னும் பட்சத்தில் அதன் கட்டுமானத்தொகை ரூ 5,000 தான் ஆகும் அப்போ 500 அடி நீளமும் 100 அடி அகலமும் ???அதுவும் எப்படி 12 நீதிமன்ற அறைகள் ????இது தான் வாழ்க்கையா?? இது தான் வாதமா??இது தான் பயணமா? நீதிபதி வீட்டில் ரூ 30 கோடிக்கு மேல் பணக்கட்டு அவருக்கு தண்டனை கிடையாது வெறும் இடமாற்றம்??? இங்கே வாங்கினது போதும் அங்கு போய் வாங்கு என்று சொல்ல அப்படித்தானே???அநீதிமன்றமே???தான் தவறு செய்தால் ஒன்றும் இல்லை அது வெறும் தக்காளி சட்னி மற்றவர்கள் செய்தால் அது ரத்தம் அப்படித்தானே???


lana
ஏப் 15, 2025 12:51

கூடுதலாக 1 நீதிமன்ற அறை கட்ட 25 கோடி. தமிழகம் மிகவும் முன்னேறிய மாநிலம். இப்படி கொள்ளை அடிப்பது ஒன்றே கொள்கை ஆக வாழும் கட்சிகள் அதற்காக குவாட்டர் கோழி பிரியாணி மற்றும் 500/1000 வாங்கி வாக்குகள் செலுத்தும் மக்கள் இருக்கும் வரை உலகில் மிகவும் கடன்கார முன்னேறிய மாநிலம் தமிழகம் மட்டுமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை