மேலும் செய்திகள்
வாய்க்கால் துார் வாரும் பணி
21-Mar-2026
மேலுார்: மேலுாரில் ரூ. 3.70 கோடியில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் 9 மாதங்களில் உட்புறச்சுவர் வெடித்தும், வெளிப்புறம் சிமென்ட் பூச்சு உதிர்ந்தும் வருகிறது. இரண்டு தளங்களிலும் கழிவுநீர் தேங்கியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பொதுப்பணி துறையினர் அலுவலகத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மராமத்து பணிகளைத் துவக்கினர். இப் பணிகள் தரமான முறையில் நடக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
21-Mar-2026