கல்லுாரியில் ஆராய்ச்சி மாநாடு
திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் அநுஸந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ஆராய்ச்சி மாநாடு நேற்று துவங்கியது. முதல்வர் அசோக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். மாணவி அருணா அறிமுக உரையாற்றினார். அமேசான் நிறுவன அதிகாரி ஸ்ரீதர் குலசேகரன் பேசினார். மாநாட்டு மலரை சோமசுந்தரம், ஹர்ஷிதா வெளியிட்டனர். 145 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.