நெல்லில் குலை நோய் தாக்குதல்
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசனம் மூலம் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டுள்ளனர். அய்யனார்குளம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நெற்பயிர்களில் குலை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. கதிர்கள் பிடித்து வளரும் நிலையில் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டவுடன் கதிர்களும், பயிர்களும் காய்ந்து கருகிப்போகிறது. சில நாட்களாக சுழல்காற்று மழையின் காரணமாக பயிர்கள் சாய்ந்து சேதப்படுத்தி வரும் நிலையில், தற்போது நெல் வயல்களில் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது. செல்லம்பட்டி வேளாண் துறை அதிகாரிகள் இந்த பகுதியில் ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.