உள்ளூர் செய்திகள்

நெல் நடவுப்பணி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மானாவாரி பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவு பணிகளை துவக்கியுள்ளனர். சில நாட்களாக பெய்துவரும் மழையால் மானாவாரி பகுதியில் விவசாயிகள் நாற்றங்கால் அமைப்பது, நாற்றுப்பாவும் பணிகளை துவக்கி உள்ளனர். பலர் நெல் நடவு செய்து வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், ''மானாவாரி கண்மாய்கள் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன. கண்மாய் தண்ணீரை நம்பியுள்ள நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மட்டும் தற்போது நெல் நடவு பணிகளை துவக்கி உள்ளோம். தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே மற்ற விவசாயிகள் நடவு செய்வர்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை